உண்மையை உரக்க சொன்ன தர்கா

0
3011

ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவின் தலைவர் சஜ்ஜதனாஷின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) நீதிமன்றத்தின் முடிவைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டார். அதில், பயங்கரவாதி யாசின் மாலிக் காஷ்மீரிகளிடமிருந்து புத்தகங்களைப் பறித்து, அவர்களின் கைகளில் துப்பாக்கிகளை வலுக்கட்டாயமாக திணித்து அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றினார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒரு சிறந்த தொடக்கம். இதன் மூலம், பாகிஸ்தான் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார். மேலும், அஜ்மீர் தர்கா சார்பில் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில், ‘யாசின் மாலிக் தனது குற்றங்களுக்காக முழுமையான நீதித்துறை நடைமுறைகளுக்குப் பிறகே தண்டிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் இதன் மூலம் தனது ஞானத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. பாரதத்தில் பயங்கரவாதத்தைத் தூண்டுவதன் மூலமும், காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களை மேற்கொள்வதன் மூலமும், யாசின் மாலிக் போன்றவர்கள் மூலமாக பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தானின் உண்மையான முகம் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here