ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம் மால்டா என்ற நகரில், ஜவுளிக்கடைக்குள் அத்துமீறி புகுந்த இரு மர்ம நபர்கள், அங்கு வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து தலையை துண்டித்தனர்.
இளைஞரை கொடூரமாக கொன்ற கொலையாளிகள் மிரட்டல் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் யாரேனும் நுபுர் சர்மாவிற்கு ஆதரவு அளித்தால் அவர்களுக்கும் இதே நிலைதான் என எச்சரிக்கும் விதமாக ஆயுதங்களை காண்பித்து அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்
கொடூர கொலைக்கு பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா என சர்வதேச தொடர்புகள் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.