”வரி ஏய்ப்பில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் அவர்களின் ஜி.எஸ்.டி., உரிமம் ரத்து செய்யப்பட்டு, அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டில் வரி வருவாயை மேலும் உயர்த்த, அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் ஜி.எஸ்.டி., உரிமம் ரத்து, அபராதம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், வரி ஏய்ப்பில் ஈடுபட்டால், கடுமையாக நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.இவ்வாறு அவர் கூறினார்.