நாட்டில் தேசிய விளையாட்டு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்டு 29-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஹாக்கி விளையாட்டின் தலைசிறந்த வீரரான மேஜர் தியான் சிங்கின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. ஹாக்கி விளையாட்டில், ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இந்தியா 3 தங்க பதக்கங்களை வெல்ல உதவியவர் தியான் சந்த். அவரை கவுரவிக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், டெல்லி தேசிய ஸ்டேடியம் பின்னர் மேஜர் தியான் சந்த் ஸ்டேடியம் என பெயர் மாற்றியமைக்கப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது .