கறுப்புப் பணம், வரி ஏய்ப்பாளா்கள் மூலம் கடன் வழங்கப்படும் சட்ட விரோத நிதி நிறுவனங்கள், செயலிகள் மீது நடவடிக்கை எடுக்க ரிசா்வ் வங்கி மற்றும் ஐ.டி துறையினரை மத்திய நிதித் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் பல்வேறு நகரங்களில் மத்திய வருவாய்த் துறை நடத்திய சோதனையில் பல்வேறு போலி நிறுவனங்கள், சீன நிறுவனங்கள் ஆகியவை மின்னணு செயலிகள் மூலம் கடன் வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
சட்டப்படியும் , நடைமுறை மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உள்ள, அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ரிசா்வ் வங்கி மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை ஆகியவை மூலம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இறுதியாக முடிவுகள் எடுக்கப்பட்டதாக நிதியமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Home Breaking News ரிசா்வ் வங்கி சட்ட விரோத கடன் செயலிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஐடி துறைக்கு நிதியமைச்சகம்...