அனைத்திந்திய அலுவல் மொழி மாநாட்டில் உள்துறை அமைச்சர் விளக்கம்!

0
420
சூரத் : ”தமிழ் உட்பட எந்த மொழிக்கும் ஹிந்தி போட்டியல்ல; அது ஒரு நட்பு மொழி,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள சூரத் நகரில், அனைத்திந்திய அலுவல் மொழி மாநாடு நேற்று நடந்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது : அனைத்து மொழிகளும் ஒன்றுக்கொன்று ஆதரவாக, பக்கபலமாக இருக்க வேண்டும். மற்ற மொழிகளில் உள்ள வார்த்தைகளை ஹிந்தியிலும் பயன்படுத்த வேண்டும்.நம் நாட்டில் ஒரு தவறான கருத்து உள்ளது. ஹிந்திக்கும் குஜராத்திக்கும் போட்டி, ஹிந்திக்கும் தமிழுக்கும் போட்டி, ஹிந்திக்கும் மராத்திக்கும் போட்டி என்று பேசுகின்றனர்.
ஹிந்தி எப்போதும் மற்ற இந்திய மொழிகளுக்கு போட்டியாக இருந்தது கிடையாது. அனைத்து மொழிகளுக்கும் ஹிந்தி நண்பன் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.மாநில மொழிகள் இருந்தால் தான் ஹிந்தி வளர முடியும். அதுபோல ஹிந்தி இருந்தால் தான் மற்ற மொழிகளும் வளர முடியும். தாய் மொழியை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் மற்ற மொழிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here