மேக் இன் இந்தியா: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் விமானப்படையில் சேர்ப்பு

0
427

மேக் இன் இந்தியா திட்டத்தை மேலும் ஊக்குவிக்கும் விதமாக பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இலகுரக போர் ஹெலிகாப்டர்களை இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டது.

5.8 டன் எடையுள்ள இரட்டை என்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர், ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதங்களை இதில் பொருத்தி தாக்குதல் நடத்தமுடியும். இந்த ஹெலிகாப்டர், உயரமான மலைப்பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய வகையிலான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வானிலையிலும் இயங்கக்கூடிய இந்த ஹெலிகாப்டர், இரவு நேரத்திலும், காடுகளிலும் பயன்படுத்தலாம். மெதுவாக பறக்கும் விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானம் ஆகியவற்றுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த ஹெலிகாப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பல்வேறு வகையான ஆயுதங்களை பொருத்தி ஏற்கனவே பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here