பழங்குடி குழந்தைகளின் இசை நிகழ்ச்சி

0
131

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியா செல்ல உள்ளார். அங்கு பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி நகரைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகளின் இசைக் குழு,
‘நாளை பிரதமர் முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளது. பிரதமர் முன்னிலையில் குழுவினர் இசைக்கவிருப்பது இது முதன் முறையல்ல. கடந்த செப்டம்பர் 30, 2022 அன்று ரூ. 7200 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக குஜராத் மாநிலம் அம்பாஜிக்கு பிரதமர் சென்றிருந்தபோது, அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்த வேளையில் பிரதமரை வரவேற்று குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள். இளம் குழுவினரின் வாத்திய இசையைக் கேட்டு மகிழ்ந்து, அவர்களை பிரதமர் பாராட்டியது மட்டுமல்லாமல், பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்பு அவர்களுடன் நேரில் சென்று உரையாடவும் அவர் தவறவில்லை . தமது இளம் நண்பர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுடன் குழு புகைப்படம் ஒன்றையும் பிரதமர் எடுத்துக்கொண்டார். இத்தகைய அபாரமான இசை திறனைக் கற்றுக்கொண்ட பழங்குடி குழந்தைகளின் கதையை நாம் பகிர்ந்தே ஆக வேண்டும். ஒரு காலத்தில் இந்தக் குழந்தைகள் தங்களது அடிப்படை தேவைகளுக்காகவும், கல்வி கற்கும் வாய்ப்புக்காகவும் போராடினார்கள். அம்பாஜி ஆலயத்தின் அருகே, அவர்கள் அடிக்கடி யாசகம் கேட்டுக்கொண்டிருந்தனர். இது போன்ற குழந்தைகளுக்கு உதவிய அம்பாஜியில் இயங்கும் ஸ்ரீ சக்தி சேவா கேந்திரா என்ற தொண்டு நிறுவனம் ஒன்று, இக்குழந்தைகளுக்கு கல்வி வழங்கியதோடு, அவர்களது தனித்திறமையையும் கண்டறிந்தது. இசைக் குழுவில் திறமை மிக்க பழங்குடி குழந்தைகளும் இந்த நிறுவனத்தால் பயிற்றுவிக்கப்பட்டனர். இந்த இளைஞர்களின் வாத்திய இசையால் பெரிதும் கவரப்பட்டு, அவர்களைப் பாராட்டிய பிரதமர், வரலாற்று சிறப்புமிக்க தேசிய ஒற்றுமை தினத்தில் கலந்து கொண்டு வாத்திய நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பை அவர்களுக்கு | வழங்குவதற்காக, அக்டோபர் 31ம் தேதி கெவாடியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். நாளை கெவாடியா செல்லவுள்ள பிரதமர், சர்தார் பட்டேலின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவார். ஒற்றுமை தின அணிவகுப்பில் கலந்து கொள்வதோடு, லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் அடிப்படைப் பிரிவில் அரசு பணிக்காக பயிற்சி பெறும் பல்வேறு அதிகாரிகள் குழுவினருடனும் உரையாடுவார்.

Tribal children's musical band to perform in front of Prime Minister in  Kevadia on 31st October

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here