காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வரும் வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ் ராஜலிங்கம் அளித்த பேட்டி ஒன்றில், “வாரணாசியில் மகாகவி பாரதியார் 4 ஆண்டு காலங்கள் வாழ்ந்த வீடு ‘சிவமடத்தை’ புதுப்பிக்க பெருந்திட்டம் பரிசீலனையில் உள்ளது. இந்த ‘சிவமடத்தில்’ மகாகவி பாரதியார் சுமார் 4 ஆண்டு காலங்கள் வாழ்ந்துள்ளார். அவர் இங்கு இருக்கும் போது, அவருக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த வீட்டில் தற்போது மகாகவி பாரதியாரின் வழிவந்தவர்கள் வசித்து வருகின்றனர். மகாகவி பாரதியாரின் இலக்கியப் படைப்புகள் டிஜிட்டல் முறையில் நவீனமாக்கப்படும். குறிப்பாக அவர் வாழ்ந்த வீடு, இலக்கியப் படைப்புகள், சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய பங்கேற்பு, சமூக அவலங்களையும், அந்த காலகட்டத்தில் இருந்த சமுதாயப் பிரச்சினைகளையும் அவர் எவ்விதம் தனது கவிதைகள் மூலம் அணுகினார் போன்ற முக்கியத் தகவல்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்தும் டிஜிட்டல் வடிவமாக்கப்படும். மகாகவி பாரதியாரின் இலக்கியப் படைப்புகள் டிஜிட்டல் முறையில் நவீனமாக்கப்படும். குறிப்பாக அவர் வாழ்ந்த வீடு, இலக்கியப் படைப்புகள், சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய பங்கேற்பு, சமூக அவலங்களையும், அந்த காலகட்டத்தில் இருந்த சமுதாயப் பிரச்சினைகளையும் அவர் எவ்விதம் தனது கவிதைகள் மூலம் அணுகினார் போன்ற முக்கியத் தகவல்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்தும் டிஜிட்டல் வடிவமாக்கப்படும். மேலும் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு ‘சிவமடத்தில்’ பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.