ஜெகதீஸ் சந்திரபோஸ்

0
233

ரேடியோவை கண்டுபிடித்தவர் என மார்க்கோனிக்கு நோபல் பரிசு கொடுத்து கௌரவித்த இந்த உலகம் அவருக்கு முன்னரே ரேடியோவை கண்டுபிடித்த சர் ஜெகதீஸ் சந்திர போஸ் என்னும் இந்தியரை கௌரவிக்க தவறிவிட்டது. இப்படி உலகம் இன்று பயன்படுத்தும் பல கண்டுபிடிப்புகளை முதலில் இந்தியர்களே கண்டுபிடித்துள்ளார்கள். ஜெகதீஷ் சந்திர போஸ் என்னும் இந்தியர் மார்க்கோனி ரேடியோவை கண்டுபிடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பொதுமக்கள் முன்னிலையில் ரேடியோ அலைவரிசையை வெற்றிகரமாக சோதித்து காட்டினார்.
1858 நவம்பர் 30 ஆம் தேதி வங்காளத்தில் மைமென்சிங் என்னும் ஊரில் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்தார். இருபத்திரண்டு வருடங்கள் இந்தியாவின் பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பாகக் கல்வி கற்று, மேற்கொண்டு லண்டன் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயில, 1880-ல் இங்கிலாந்துக்குச் சென்றார்.
ஜகதீஷ் சந்திர போஸின் அப்பா ஆங்கிலேய அரசில் உயர் பதவியில் இருந்தவர், ஆனாலும், வித்தியாசமான நபர். ஏழைகளுக்கு தொடர்ந்து உதவுகிற காரியங்களை செய்து கொண்டிருந்தார் ; மக்களுக்கு உதவ தன் சொத்துக்களை பெருமளவில் செலவிட்டார். எளியவர்கள் உயரவேண்டும் என்பது மட்டுமே அவர் மனதில் இருந்தது.
ஆங்கிலப்பள்ளிக்கூடங்களில் தன் மகனை படிக்க அனுப்பாமல் தாய்மொழியான வங்கமொழியில் எளியவர்களின் பிள்ளைகளோடு போஸை படிக்க வைத்தார்.
மாநில கல்லூரியில் போஸ் பேராசிரியர் ஆகியிருந்தார். அவருக்கு முழுச்சம்பளத்தை இந்தியர் என்பதால் தர மறுத்தார்கள். மூன்று வருடம் சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் சிறப்பாக நடத்தினார் இவர். அசந்து போய் மூன்று வருட பாக்கியோடு ஆங்கிலேயர்களுக்கு இணையான சம்பளம் தந்தார்கள்.
தாவரங்களுக்கு உணர்ச்சி உண்டு என்பதை கண்டுபிடித்து உலகிற்கு உணர்த்தியவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here