முதல் ஒருங்கிணைந்த ராக்கெட் வசதி

0
178

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், கடந்த நவம்பர் 18 அன்று பாரதத்தின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம் எஸ்’ ராக்கெட்டை தனது முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக ஏவியது. 2020LD ஆண்டில் மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்காக விண்வெளித் துறை திறந்த பிறகு, பாரதத்தில் முதல் தனியார் விண்வெளித்துறை நிறுவனமாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மாறியது. ஸ்கைரூட் நிறுவனம், விக்ரம் எஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதைக் கொண்டாடும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள ‘டி ஹப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட தெலுங்கானா மாநில ஐடிமற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ், நாட்டின் முதல் ஒருங்கிணைந்த ராக்கெட் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சோதனை வசதி தெலுங்கானாவில் அமையும் ஹைதராபாத்தை பாரதத்தின் விண்வெளி தொழில்நுட்ப தலைநகராகக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநில அரசு ஏற்கனவே விண்வெளி தொழில்நுட்பக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார் மேலும் தெலுங்கானா மாநிலத்தில் இதனை நிறுவ ஸ்கைரூட் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்துள்ள அவர். தெலுங்கானா அரசு இதற்கான உதவிகளை செய்யும் என உறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here