தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து ஹிந்து கோயில்களையும் மடங்கள் உள்ளிட்ட மத அமைப்புகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக்கோரி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் நீண்ட காலமாக ஹிந்து ஆலயங்கள் மற்றும் மத அமைப்புகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவ்வாறு இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 மற்றும் 26க்கு எதிரானது. இது தொடர்பாக 2014ம் ஆண்டு நான் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், ஆலயத்தின் எந்த ஒரு மத செயல்பாடுகளின் உரிமைகளையும் எந்த ஒரு அரசும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து ஹிந்து ஆலயங்கள் மற்றும் மடங்கள் உள்ளிட்ட மத அமைப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். என்று அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு அப்படி செய்யத் தவறினால் தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.