பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த தீபக் சாலுங்கே என்ற நபர் உளவு பார்த்து தகவல்களை தந்து வருவதை மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள தெற்கு கட்டளை ராணுவத்தின் உளவுப் பிரிவு கண்டறிந்தது. இதையடுத்து காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து ராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் அந்த நபரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.இதில் சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன.இதையடுத்து அவரை சூரத் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வாட்ஸ்அப், முகநூல் மூலம் ஐ.எஸ்.ஐ அமைப்பைச் சேர்ந்த ஹமீது, காஷிப் உள்ளிட்டோருக்கு நாட்டின் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து வந்தது தெரியவந்தது. மேலும், ஐ.எஸ்.ஐ அமைப்பினர், தீபக் சாலுங்கேவிடம், தங்களை ஒரு பெண் என்றும் பெயர் பூஜா சர்மா என்றும் கூறி அறிமுகமாகி தகவல்களைப் பெற்றுள்ளனர்.தகவல்களுக்கு கணிசமான பணம் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.