திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் உதய்பூரில் உள்ள திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிப்லப் குமார் தேப்பின் பூர்வீக வீட்டுக்கு வருகை தர இருந்த துறவிகளை சில மர்ம நபர்கள் தாக்கியதுடன் வாகனங்களையும் சேதப்படுத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள், சி.பி.எம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மாவோயிஸ்ட்) ஆதரவாளர்களாகத் தெரிந்ததாக அங்குள்ளவர்கள் கூறினர். பிப்லப் குமார் தேப்பின் தந்தையின் வருடாந்திர நினைவு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த துறவிகளும் வேத பண்டிதர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பிப்லப் குமார் தேப்பின் இல்லத்திற்கு யாகம் நடத்த வந்திருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வந்த மர்ம நபர்கள், துறவிகள் மற்றும் வேத பண்டிதர்களை தாக்கி அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தினர். அப்போது அந்த மர்ம நபர்கள், “இந்த பகுதியில் சி.பி.ஐ(எம்) இல்லையென்றால் வேறு எதுவுமில்லை” என்று முழக்கங்களை எழுப்பினர். அருகில் இருந்தவர்களும் அப்பகுதி மக்களும் உடனடியாக வந்து அவர்களை காப்பாற்றினர், அதைத் தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் தப்பியோடினர். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேக்கிக்கும் சில நபர்களின் கடைகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. உடனடியாக காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை சமாளித்தனர்.