ஏவுகணை சோதனைகள் அறிவிப்பு

0
218

உக்ரைன் பாரதம், இந்த ஆண்டில் நடைபெற உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது ஏவுகணை சோதனைக்கான பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அறிவிக்கையை வெளியிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில் இருந்து வங்கக் கடலுக்குள் தென் கிழக்கே இந்த சோதனைகள் நடைபெறவுள்ளது. அதன்படி வரும், 10 மற்றும் 11ம் தேதிகளுக்கு இடைபட்ட காலத்தில் இந்த வருடத்தின் 2வது நடைபெறும். இந்த சோதனை ஒடிசா மாநிலம் பாலசோரில் இருந்து கடலுக்குள் தென் கிழக்கே 365 கிலோமீட்டர் நீளம் கொண்ட பகுதியில் நடைபெறும் என தெரிகிறது. அனேகமாக இந்த சோதனை ஏற்கனவே பாரதம் பயன்படுத்தி வரும் க்ரூஸ் ரக ஏவுகணையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 3வது சோதனை, வரும் 12, 13, 14 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சோதனை செய்யப்பட உள்ளது. இந்த சோதனை சுமார் 650 கிலோமீட்டர் நீளம் கொண்ட பகுதியில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது நிர்பய் க்ரூஸ் ஏவுகணை சோதனையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த முறை ‘மாணிக்’ என்ற வகை என்ஜினுடன் நிர்பய் ஏவுகணை சோதனை செய்த போது அது தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here