வி.சா.காண்டேகர்

0
247

1. வி.சா.காண்டேகர் மராத்திய மாநிலம் சங்கிலி என்னும் சிற்றூரில் 19.01.1898 ஆம் நாள் பிறந்தார்.
2. தனது கல்விச் செலவுகளை ஈடுசெய்வதற்காகப் பிற மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தார்.
3. சிரோட்டு என்னும் சிற்றூரில் உள்ள பள்ளியில் 1920 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர்களுக்குக் கல்வி புகட்டினார். ஆசிரியர் பணியை சமூகத் தொண்டாகக் கருதி பணிபுரிந்தார்.
4. முதலில், நூல்விமர்சனம், அரசியல் திறனாய்வு, சமூக மாற்றம் குறித்த கட்டுரைகளை ‘வைனதேயே’ என்னும் வார இதழில் எழுதினார். இருநூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள் எழுதியுள்ளார். அச்சிறுகதைகளைத் தொகுத்து இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிட்டு உள்ளார். அவரது சிறுகதைகள் அன்றைய சமூக நிலைமைகளையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் மையமாகக் கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தின.
5. பதினைந்து நாவல்களைப் படைத்துள்ளார். இவருடைய நாவல்கள் இலட்சியக் கொள்கை கொண்டவை, கற்பனை வளம் மிகுந்தவை, சொல்லழகுடன் ஏழைகளின் பால் அன்பும், இயற்கையிடம் நேசமும் காட்டுபவை.
6. வி.சா.காண்டேகரின் நூல்கள் குஜராத்தி, தமிழ், இந்தி, சிந்து, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காளம் போன்ற பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. இந்தியப் பிறமொழிகளிலும், நன்றாக அறியப்பட்ட, ஒரே மராத்தி எழுத்தாளர்.
7. இவரது, ‘யயாதி’ என்ற நூலுக்கு ‘ஞானபீட’ விருதையும், (1974) ‘சாகித்திய அக்காதெமி’- விருதையும் (1960), ‘பத்ம பூஷன்’ விருது (1968)-யும் பெற்றுள்ளார்.
8. வி.சா. காண்டேகர் திரைப்படங்களுக்குக் கதை எழுதி உள்ளார். அவர் கதை எழுதிய ‘சாயா’ என்ற திரைப்படத்திற்கு 1936 ஆம் ஆண்டு ‘கோகர் பரிசு’ வழங்கப்பட்டது. அவரது திரைக்கதைகள் ஏழை – பண‌க்காரர்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வு, மதுவினால் ஏற்படும் தீமைகள், கந்துவட்டிக்காரர்களின் கொடுமை முதலிய சமூகப் பிரச்சனைகளைச் சித்தரிக்கின்றன. இவரது இலக்கியத் தொண்டிற்காக கொல்ஹாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக் கழகம் `டாக்டர் பட்டம்’ அளித்துச் சிறப்பித்தது.
9. வங்கத்தின் சிறந்த எழுத்தாளரான ‘சரத்சந்திர சட்டர்ஜி’யின் புதினங்களையும், ‘செஸ்டர்ன்’, ‘மில்னே’ மற்றும் ‘ரிச்சர்ட்கிஸ்’- ஆகியவர்களின் கட்டுரைகளையும் மாராத்திய மொழியில் பெயர்த்தார்.
10. மராத்திய இலக்கியத்தில் காண்டேகரைப் போல, வேறு எந்த எழுத்தாளரும் நீதிக் கதைகள் பல எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here