1. சுவாமி பிரம்மானந்தர் ஜனவரி 21, 1863 பிறந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவி. இயற்பெயர் ராக்கால் சந்திர கோஷ்.
2. ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை காளியிடம், எப்போதும் இறைநினைவில் மூழ்கியிருக்கும் பையனை தமக்குத் துணையாக அனுப்பிவைக்கச் சொன்ன பிரார்த்தனைக்குப் பின்னர், ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மிகப் புதல்வராக வந்தவர்.
3. இவரது தந்தை ஆனந்த மோகன் கோஷ், தாயார் கைலாஷ் காமினி. இவரது தாயார் கிருஷ்ண பக்தை என்பதால் இடைச்சிறுவன் என்ற பொருளில் ’ராக்கால்’ என்ற பெயரை மகனுக்குச் சூட்டினார்.
4. ஸ்ரீ ராமகிருஷ்ணர் இவரை ஆன்மிக சாதனைகளில் பலவிதங்களில் தயார்படுத்தினார். ஸ்ரீராமகிருஷ்ணரால் தமது சீடர்களுள் ஈஸ்வரகோடிகள் என்று அடையாளம் காட்டப்பட்ட ஆறு சீடர்களுள் ஒருவர்
இவர்.
5. ராக்காலுக்கு ராஜாவிற்கு உரிய தகுதிகள் உள்ளன, அவரால் பெரிய ராஜ்ஜியத்தையே ஆளமுடியும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் புகழ்ந்து கூறியதைக் கேட்ட நரேந்திரர் இனி அவரை ’ராஜா’ என்று அழைப்போம் என்று கூறினார். அதன்படியே பின்னாளில் சுவாமி பிரம்மானந்தர் ’ராஜா மகராஜ்’ என்றும், ’மஹராஜ்’ என்றும் அழைக்கப்பட்டார்.