இரண்டு பயங்கரவாதிகள் கைது

0
164

குடியரசு தின விழாவை சீர்குலைக்க முயலும் பாகிஸ்தானால் இயக்கப்படும் முஸ்லிம் பயங்கரவாதிகள், காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக டெல்லி காவல்துறை தீவிர தேடுதல் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. இது தொடர்பாக பஞ்சாப்பிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் பஞ்சாப்பின் குர்தாபூரை சேர்ந்த ராஜன் பட்டி மற்றும் பிரோஸ்பூரை சேர்ந்த கன்வல்ஜீத் சிங் என்ற சின்னா ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் இருவரும் கனடாவை சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி லக்பீர் சிங் லந்தாவின் கூட்டாளிகள். சமீபத்தில் கூட, டெல்லியில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஜக்ஜித் சிங், நவ்ஷாத் ஆகிய இருவரை காவலர்கள் கைது செய்தனர். அவர்களது வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு கையெறி குண்டுகள், மூன்று கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட ஜக்ஜித், கனடா நாட்டில் இருந்து செயல்படும் காலிஸ்தானி பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளவர் என்பதும் நவ்ஷாத், ஹர்கத் உல் அன்சார் என்ற முஸ்லிம் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது நினைவு கூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here