அக்னிபத் திட்டத்தை எதிர்க்கும் பி.எப்.ஐ

0
98

தடைசெய்யப்பட்ட முஸ்லிம் மத அடிப்படைவாத அமைப்பான பி.எப்.ஐ அமைப்புக்கு எதிராக நாடு தழுவிய சோதனையின் போது கைது செய்யப்பட்ட மசார் கான், சாதிக் ஷேக், முகமது இக்பால் கான், மோமின் மிஸ்திரி மற்றும் ஆசிப் ஹுசைன் கான் ஆகிய 5 பி.எப்.ஐ பயங்கரவாதிகள் மீது மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏ.டி.எஸ்), சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், தேசத்திற்கு எதிராக சதி செய்ததாகவும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. மேலும், மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த ‘அக்னிபத்’ திட்டத்தை “முஸ்லிம் இனப்படுகொலைக்கான” கருவியாக முத்திரை குத்தி, அரசுக்கு எதிராக முஸ்லிம்களை அணிதிரட்ட பி.எப்.ஐ எவ்வாறு பிரச்சாரம் செய்தது, எப்படி ட்டமிட்டது என்பதையும் அவர்கள் குற்றப்பத்திரிகையில் எடுத்துரைத்தனர். அக்னிபத் திட்டம், சாத்தான் இஸ்ரேல் போன்ற ஒரு கொள்கை கொண்டது, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ராணுவ பயிற்சி பெற்ற ஹிந்துக்கள் குழுக்களை அவர்கள் உருவாக்குவார்கள். கலகக்காரர்களின் இந்த ராணுவம், தனது ராணுவப் பயிற்சியின் காரணமாக, தள்ளுமுள்ளு வந்தால் ஓடாது எதிர்த்து நிற்கும் என பொய்ய்யாக பிரச்சாரம் செய்தனர். தவிர, பி.எப்.ஐ அமைப்பு, தங்கள் இலக்குகளை அடைய வெளிநாடுகள் அல்லது பிற அமைப்புகளின் உதவியுடன் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பெறுவதற்கான திட்டங்களைக் கொண்டிருந்தது என ஏ.டி.எஸ் தனது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது. தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த 5 பேரும், மகாராஷ்டிரா ஏ.டிஎ.ஸ் படையால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 20 பேரில் அடங்குவர். இவர்கள் மீது கடந்த பிப்ரவரி 2ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 1,113 பக்க குற்றப்பத்திரிகையில், முக்கிய குற்றவாளியான மசார் மன்சூர் கானின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ‘2047க்குள், இந்தியாவில் இஸ்லாத்தின் ஆட்சியை நோக்கி’ என்ற ஏழு பக்க கையேட்டை மேற்கோளிட்டுள்ளது. இது, பாரதத்தில் முஸ்லிம் ஆட்சியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. மேலும் அந்த குற்றப்பத்திரிகையில், பி.எப்.ஐயின் மோசமான வடிவமைப்புகள் மற்றும் அந்த திட்டங்களை நிறைவேற்ற அதன் செயல்பாட்டாளர்கள் எவ்வாறு பணியாற்றினர் என்பது பற்றிய பல திடுக்கிடும் விவரங்களை வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் ஒன்றாக, உயர்ஜாதி ஹிந்துக்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்ட அமைப்பாக ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்) தவறாக சித்தரித்து ஹிந்து சமூகங்களுக்கு இடையே பிளவை உருவாக்க பி.எப்.ஐ விரும்புவதாக குற்றப்பத்திரிகை கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here