இந்துமுன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளீயிட்டுள்ள அறிக்கையில், “சங்கரன்கோவிலில் கோவிலுக்குள் சாமி கும்பிட்டு திரும்பிய பக்தர்கள் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான பக்தர்களை கைது செய்ய செய்த புளியங்குடி டி.எஸ்.பி அசோக் உள்ளிட்ட தென்காசி மாவட்ட காவல்துறையினரின் செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது. தனது மனைவியுடன் சாமி கும்பிட்டு வெளியே வந்த இந்துமுன்னணி மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையா மீது புளியங்குடி டி.எஸ்.பி அசோக் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலில் பலத்த காயமுற்ற பொன்னையா, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயிலில் இருந்து வெளியே வந்து காவல்துறை தாக்குதலில் படுகாயம் அடைந்த சங்கரன்கோவிலை சார்ந்த பாடகலிங்கம் என்ற பக்தர், கொடுங்காயம் அடைந்ததால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் டிஎஸ்பி, தி.க மற்றும் தி.மு.கவின் கைப்பாவையாக செயல்படுவதை காட்டுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிலும் புளியங்குடி டி.எஸ்.பி அசோக் இதே போல் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளா.ர் ஹிந்து கோயில் விழாக்களின் போது ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளா.ர் இது மிகுந்த கண்டனத்துக்குரியது. கடவுள் மறுப்பாளர் வீரமணி பொதுக்கூட்டத்தை கோமதியம்மன் கோயில் அருகில் நடத்துவதற்காக கோயிலில் இருந்து வெளியே வந்தவர்களை எல்லாம் அடித்து காயப்படுத்திய காவல்துறையின் அராஜக செயலை கண்டித்தும் தொடர்ந்து ஹிந்துக்கள் மீது அராஜகமாக தாக்குதல் நடத்தி வரும் டி.எஸ்.பி அசோக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்துமுன்னணி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை வரும் 28.02.2023 அன்று நடத்தவிருக்கிறது. திட்டமிட்ட ரீதியில் கடவுள் மறுப்பாளர்களின் கூட்டத்தை கோயில் முன்பு நடத்த அனுமதி அளித்து ஹிந்துக்களை இழிவு படுத்துவது எந்த வகையில் நியாயம்? தொடர்ந்து தி.மு.க அரசு இத்தகைய பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிப்பது மதக் கலவரங்களை ஏற்படுத்துவதற்காகவே என்று மக்கள் எண்ணுகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிலும் டி.எஸ்.பி அசோக் இதே போல, பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். ஆகவே அவரை இடைநீக்கம் செய்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.