பயங்கரவாத ஆதரவு அமைப்பு ராகுலுக்கு ஆதரவு

0
147

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து ஜமாத் இ இஸ்லாமியுடன் இணைந்த இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கௌன்சில் (ஐ.ஏ.எம்.சி) உள்ளிட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் ராகுல் காந்திக்கு ஆதரவாக களமிறங்குவது, காங்கிரஸ் கட்சியின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என சமூக உடகங்களில் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த அறிக்கையில், ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு அவரை துன்புறுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது தகுதி நீக்கம் என்பது, கடுமையான அநீதி மற்றும் ஆளும் கட்சியின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும், எதிர்க்கட்சிகளை அழிக்கவும், கருத்து வேறுபாடு குரல்களை அமைதிப்படுத்தவும் விரக்தியின் தெளிவான வெளிப்பாடு. அரசியல் உள்நோக்கம் கொண்ட அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ஐ.ஏ.எம்.சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஆளும் கட்சி, அரசியல் நலன்களுக்காக நீதித்துறையை கையாள முடியும் என்றும் இது ஒரு செய்தியை அனுப்புகிறது என்று ஐ.ஏ.எம்.சி கூறியுள்ளது.

ஐ.ஏ.எம்.சி நிர்வாக இயக்குனர் ரஷீத் அகமது கூறியதை மேற்கோளிட்டு அறிக்கையில், “ராகுல் காந்தியை பாரத நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகத்தின் கொள்கைகளை அப்பட்டமாக மீறுவதாகவும், பாரதம் ஒரு பாசிச நாடாக இறங்குவதை நினைவூட்டுவதாகவும் உள்ளது. இது ஒரு தனி நபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மோடி ஆட்சியை விமர்சிக்கும் அனைவருக்கும் எதிரான தாக்குதல். இந்த ஆபத்தான வளர்ச்சியைக் கவனத்தில் கொள்ளுமாறும், பாரதத்தில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக குரல் கொடுக்குமாறும் பிடன் நிர்வாகத்தையும் சர்வதேச சமூகத்தையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐ.ஏ.எம்.சிவின் சந்தேகத்திற்குரிய வரலாறு: ரஷீத் அகமது, இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் (ஐ.ஏ.எம்.சி), ஒரு தீவிர இஸ்லாமியக் குழுவின் நிர்வாக இயக்குநராக உள்ளார். அந்த அமைப்பு, பாரதத்துக்கு எதிரான பரப்புரையின் நீண்ட வரலாறு கொண்டுள்ளது. இது, ஜமாத் இ இஸ்லாமி ஆதரவுடைய ஒரு பரப்புரை அமைப்பாகும். கடந்த காலத்தில், சர்வதேச மத சுதந்திரத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் கமிஷன் மூலம் பாரதத்தை தடுப்புப்பட்டியலில் சேர்க்க, அமெரிக்காவில் உள்ள பல்வேறு குழுக்களுடன் ஒத்துழைத்து பணம் செலுத்தியதாக இதன் மீது குற்றச்சாட்டு உள்ளது. டிஸ்இன்ஃபோ லேப் (Disinfo Lab) அமைப்பின் விரிவான அறிக்கையானது, பயங்கரவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமியுடன் அதன் தொடர்பை அம்பலப்படுத்தியுள்ளது. ஐ.ஏ.எம்.சி நிறுவனர் ஷேக் உபைத் மற்றும் அதன் உறுப்பினர் அப்துல் மாலிக் முஜாஹித் ஆகியோர் பாகிஸ்தானின் ஜமாத் இ இஸ்லாமிக்கான அமெரிக்க முன்னணியான வட அமெரிக்காவின் இஸ்லாமிய வட்டத்திற்கு (ICNA) தலைமை தாங்கியுள்ளனர். டிஸ்இன்ஃபோ லேப் குற்றச்சாட்டின்படி ICNA, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது IAMC யின் தலைவராக இருக்கும் ரஷீத் அகமது, வட அமெரிக்காவின் இஸ்லாமிய மருத்துவ சங்கத்தின் (IMANA) முன்னாள் நிர்வாக இயக்குநராக இருந்தார். இமானாவின் செயல்பாட்டு இயக்குநராக ஜாஹித் மஹ்மூத், முன்னாள் பாகிஸ்தான் கடற்படை அதிகாரி ஆவார். (செய்தி ஆதாரம்: https://www.opindia.com/2023/03/islamic-terror-orgs-jamaat-e-islami-linked-iamc-support-rahul-gandhi/)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here