மகாத்மா அன்சுராசு

0
376

ஏப்ரல் 19, 1864 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள பஜ்வாரா நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலேயே அறிவுக்கூர்மை மிக்க மாணவராகத் திகழ்ந்தார், சுவாமி தயானந்தரின் உரையை ஒருமுறை கேட்டார். அதுமுதல், சமூக சேவையே வாழ்வின் லட்சியம் என தீர்மானித்து ஆரிய சமாசத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். படிக்காத மக்களுக்கு கடிதங்கள் எழுதிக் கொடுத்தும், கடிதங்களை படித்துக் கூறியும் வந்தார். தயானந்தரின் மறைவுக்குப் பிறகு அவரது நினைவாக ஒரு கல்வி நிறுவனம் தொடங்க முடிவு செய்தார். ஆங்கிலக் கல்வியோடு, இந்திய பாரம்பரிய வேத கலாச்சார கல்வி வழங்கும் பள்ளியை நிறுவுவது குறித்து சமாஜ உறுப்பினர்களுடன் தீவிரமாக ஆலோசித்தார். 1911-ல் தயானந்த் கல்லூரியின் நிர்வாகக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட லாலா அன்சுராசு, லாகூர் டிஏவி கல்லூரியின் முதல்வராக 25 ஆண்டுகள் நெடும் பணிபுரிந்ததோடு. ஆரிய பிராதேசிக் பிரதிநிதி சபாவின் தலைவராகவும் பொறுப்பேற்றார். சொற்பொழிவாளராக இருந்ததோடு பிரார்த்தனை, சுய பரிசோதனை, தேச பக்தி, மக்கள் சேவையையும் தன் சொற்பொழிவுகளில் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here