சுதந்திர போராட்ட புரட்சி வீரன். பல சுதந்திர போராட்ட வீரர்களை உருவாக்கியவர்.
இந்திய சுதந்திர சங்கம் அமைத்து பிரிட்டிஷ் கிறிஸ்தவ அரசாங்கத்தை நடுநடுங்க செய்தவர் .
சுதந்திரத்திற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாது பல சாகசங்களை செய்தவர் .
50 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர்.
அந்தமான் உட்பட பல சிறைச்சாலைகளில் கடும் சித்திரவதைக்கு ஆளானவர்.
அண்ணன் தம்பிகள் மூவரும் ஒரே நேரத்தில் சிறை தண்டனை அனுபவித்த கொடுமை இவரது குடும்பத்திற்கு தான் ஏற்பட்டது.
பட்டியலின மக்கள் மற்றவர்களுடன் சமமாக உட்கார்ந்து உணவருந்த ஹோட்டல் துவக்கியவர் .
நான் இறந்தால் எனது சடலத்தை அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து எரியூட்ட வேண்டும், அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும் என்றார்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இருந்த பட்டியலின ‘டாக்ரா’ சமூகத்து மக்களை தாய்மதம் திருப்பியவர், அவர்களுக்கு பிற சமுதாயத்தினருடன் திருமண ஒப்பந்தம் நடத்த செய்தவர்.
இந்து சமுதாயத்தின் நலனுக்காக தீண்டாமை வேரோடு அழிக்கப்படவேண்டும், இது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்றார் .
எழுத்தாளர்; பத்திரிக்கையாளர்; சிந்தனையாளர்; இந்துத்துவ கருத்தியலை முன்னெடுத்தவர் என்று பன்முக ஆளுமை கொண்ட மாபெரும் வீரர் வீர சாவர்க்கர் பிறந்ததினம் இன்று (28.05.1883).