தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய நான்கு ரயில்வே கோட்டங்களில், தலா, 15 ரயில்வே ஸ்டேஷன்கள் என, 60 ரயில்வே ஸ்டேஷன்கள், அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் பயணிகளின் அடிப்படை தேவைகள், ரயில் நிலையத்தை அழகுபடுத்துதல், பயணிகளின் தங்கும் அறைகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் மேம்படுத்தப்படும். மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு மலை ரயிலில் பயணம் செய்யும், பயணிகளின் வசதிக்காக, ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் விரைவில் கேன்டீன் திறக்கப்படும். மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு ரயில் இயக்கும் திட்டம் உள்ளது. ரூ. 22 கோடியில் மேம்பாடு குன்னுார், ஊட்டி ரயில் நிலையங்களில் பழமையான கட்டடங்கள், நடைமேடை, வாகனங்கள் செல்லும் வசதி, பார்க்கிங், பூங்கா அமைத்தல் உட்படபல்வேறு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக,தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அவர் கூறுகையில், ”அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், ஊட்டி, 8 கோடி ரூபாய்; மேட்டுப்பாளையம், 7.50 கோடி ரூபாய்; குன்னுார், 7 கோடி ரூபாய் என,22.50 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன,” என்றார்.