அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோதியின் அதிகார பூர்வ சுற்றுப் பயணத்தினால் கிடைத்துள்ள வெற்றி. பாரதத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டு அமெரிக்கா வசம் இருந்து வருகிற 105 அரிதான தொல் பொருட்களை நியூயார்க் கில் உள்ள பாரத தூதராலயத்தில் நேற்று ஒப்படைத்தனர். இவைகளில் கிழக்கு இந்தயப் பகுதி: 47 , தென் இந்தியப் பகுதி: 27 , மத்திய இந்தியப் பகுதி: 22 , வட இந்தியப் பகுதி: 6 , மேற்கிந்தியப் பகுதி: 3 பகுதிகளைச் சேர்ந்த தொல் பொருட்களாகும் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து, கவுன்சில் ஜெனரல் ரந்திர் ஜெயிஸ்வால் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அமெரிக்க அரசு கடந்த வருடம் 157 தொல்பொருட்களை ஒப்படைத்தனர். அயல் நாடு களிலிருந்து பல தொன்மையான கலைப் பொக்கிஷங்களை மீட்டுள்ளனர்.
Home Breaking News இந்தியாவின் பழமையான தொல் பொருட் கள் & கலைச் சின்னங்களை திருப்பித் தருகிறது அமெரிக்கா