ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியின் 7வது ‘சீசன்’ சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, சீனா, ஜப்பான் என ஆறு அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. முதல் 4 போட்டியில் 3 வெற்றி, 1 ‘டிரா’ செய்த இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. தொடர்ந்து 23வது நிமிடம் இந்தியாவுக்கு மீண்டும் ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பு கிடைத்தது. இம்முறையும் அசத்திய ஹர்மன்பிரீத் சிங், மற்றொரு கோல் அடித்து அசத்தினார். போட்டியின் 36வது நிமிடம் இந்தியாவுக்கு கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை, இம்முறை ஜுக்ராஜ் சிங் கோலாக மாற்றினார். கடைசியில் ஆகாஷ்தீப் சிங் (55வது) ஒரு கோல் அடிக்க, இந்தியா 4-0 என அசத்தல் வெற்றி பெற்றது.