ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதமே இல்லாத இலக்கை அடைய, யூனியன் பிரதேசத்தின் புலனாய்வு அமைப்பு, பயங்கரவாதிகளை களை எடுக்கும் பணியை துவங்கியது. இதையடுத்து, யூனியன் பிரதேசம் முழுதும் சி.ஐ.டி., போலீசாருடன் இணைந்து, புலனாய்வு அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த வேட்டையில், ‘தடா’ எனப்படும் பயங்கரவாதம் மற்றும் சீர்குலைவு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகளில் எட்டு பேரை, அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.