சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல்1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை, இந்த விண்கல வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளன. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (செப்.,2) காலை 11:50 மணிக்கு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் பாய உள்ளது. இந்நிலையில் விண்ணில் ஏவுவதற்காக 23 மணிநேரம் 40 நிமிடத்திற்கான கவுன்ட் டவுன் இன்று காலை 12:10க்கு துவங்கியது. இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள செங்கலம்மா பரமேஸ்வரி கோயிலில், ஆதித்யா எல்1 வெற்றியடைய பிரார்த்தனை செய்தார்.