குஜராத் கக்ரபாரில் பாரத தொழில் நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள 3வது அணுமின் நிலையம் தனது முழு உற்பத்தித் திறனில் (700 மெகா வாட்) செயல்படத் தொடங்கிவிட்டது. பாரத அணு அறிவியல் & பொறியியல் நிபுணர்கள் முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது.பாரதத்தில் 8 அணு மின் நிலையங்களில் 23 அணு உலைகள் மின் உற்பத்தி செய்து வருகின்றன. இவைகள் 7,480 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டவை. மேலும் 12 அணு உலைகள் கட்டுமானப் பணியில் பல்வேறு நிலைகளில் இருந்து வருகின்றன. மத்திய அரசு கூடுதலாக மேலும் 11 அணு உலைகள் அமைத்திட அனுமதியளித்துள் ளது. 2030 ஆம் ஆண்டில் இவைகள் அனைத்தும் மொத்தம் 22,480 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்திடும்.