மத்திய அரசின், ‘உடான் 5.0’ திட்டத்தில், சேலத்திற்கு பயணியர் விமான சேவை அக்.,16) முதல் துவங்குகிறது. ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவன விமானம், பெங்களூரில் மதியம், 12:40க்கு புறப்பட்டு, 1:40க்கு சேலம் வந்தடைகிறது. இங்கிருந்து, 2:05க்கு புறப்பட்டு, 3:15க்கு கொச்சி செல்கிறது. அங்கிருந்து, 3:40க்கு புறப்பட்டு மீண்டும் சேலத்துக்கு, 4:50க்கு வந்து சேர்கிறது. பின் இங்கிருந்து, 5:15க்கு புறப்பட்டு, 6:15க்கு பெங்களூரு செல்கிறது. இன்று மதியம், 2:00 மணிக்கு விமான சேவை துவக்க விழா நடக்கிறது.