விவசாயத் துறைக்கும் புதிய திறன்கள் தேவை – பிரதமர் மோடி

0
201

மஹாராஷ்டிரத்தில் 511 திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது: இன்று, இந்தியா தனக்கென மட்டுமல்ல, உலகத்துக்காகவும் திறமையான நிபுணர்களை உருவாக்குகிறது. கிராமங்களில் துவங்கப்பட்டு திறன் மேம்பாட்டு மையங்கள் இளைஞர்களுக்கு உலக அளவில் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யும். இந்தியாவின் விவசாயத் துறைக்கும் புதிய திறன்கள் தேவை. ரசாயனம் சார்ந்த விவசாய தொழில் நுட்பங்கள் விவசாய நிலத்தை சேதப்படுத்துகின்றன. நீண்ட காலமாக, திறன் மேம்பாட்டில் அரசுகள் தீவிரம் காட்டவில்லை, அதற்கான தொலைநோக்கு பார்வையும் இல்லை. தொழில்துறையில் தேவை மற்றும் இளைஞர்களிடையே திறமை இருந்த போதிலும், திறன் மேம்பாடு இல்லாததால், இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் கடினமான சூழல் நிலவியது. மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தால் ஏழை, தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.3 கோடி இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here