ககன்யான் மாதிரி விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது – இஸ்ரோ

0
190

ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா டிவி-டி1 ராக்கெட் காலை 8 மணிக்கு விண்ணுக்கு ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது. வானிலை மாற்றம் காரணத்தால் காலை 8 மணிக்கு பதிலாக காலை 8.30 மணிக்கு விண்கலம் விண்ணில் ஏவப்படும் விண்கல சோதனையில் தாமதம் ஏற்பட்டு உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.இந்நிலையில் இதுபோன்று 3 முறை விண்கலம் ஏவும் பணி தாமதம் ஆன நிலையில், ககன்யான் மாதிரி விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி விண்கலம் வங்க கடலில் பாதுகாப்பாக இறங்கியது. இதனால் விண்கல சோதனை வெற்றி பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here