சர்தார் வல்லப்பாய் படேல் அக்டோபர் 31, 1875 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பிறந்தார்.
இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும் , உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து, ஒன்றிணைந்த பாரதத்தை உருவாக்கினார்.
பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை இணைப்பது அவ்வளவு எளிதாக அமையவில்லை. பல்வேறு சர்ச்சைகள், எதிர்ப்புகளை சமாளித்தார். எனவே இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.
முஸ்லிம் படையெடுப்பால் சிதைக்கப்பட்ட சோமநாதபுரம் கோயிலை கே. எம். முன்ஷி அவர்களுடன் இணைந்து மீண்டும் எழுப்பினார்.
சிறந்த வழக்கறிஞர். ஒருநாள் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சாட்சியை குறுக்கு விசாரணை செய்துகொண்டிருந்தபோது, அவருடைய மனைவி இறந்தது குறித்த குறிப்பு கொடுக்கப்பட்டது. அதை படித்து விட்டு தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு தனது குறுக்கு விசாரணையை தொடர்ந்தார். அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார்.
தன்னுடைய சொந்த காரியத்தைவிட கடமையே பெரிதெனக் கருதிய ஒப்பற்ற மாபெரும் தலைவர்