பாலஸ்தீனத்தின் காசா முனை மீது போர் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினரும் களமிறங்கியுள்ளனர். பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலின் சுற்றுலாத் தலமான ஈலாட்டை குறி வைத்து அவர்ளின் தாக்குதல் இருந்தது. ஏற்கனவே ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேல் மோதிக்கொண்டுள்ள நிலையில் தெற்கிலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்தினால் சமாளிப்பது கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீன வெற்றிக்காக இந்த தாக்குதல் தொடரும் என்று ஹவுதி அமைப்பு அறிவித்துள்ளது.