76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

0
1306

நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ‘ரத்து செய்தல் மற்றும் திருத்தம் செய்தல்’ மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, கடந்த ஜூலை 27-ந் தேதி மக்களவையில் நிறைவேறியது. இந்நிலையில், நேற்று மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் 2 அவைகளின் ஒப்புதலையும் பெற்று விட்டது. ”மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் 1,486 பழைய சட்டங்களை ரத்து செய்தது. தற்போது நீக்கப்படும் 76 பழைய சட்டங்களையும் சேர்த்து, மொத்தம் 1,562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here