அரபிக்கடலில் கப்பல் கடத்தால் – மீட்க களமிறங்கியது இந்திய கடற்படை

0
158

அரபிக்கடலில் மால்டா நாட்டை சேர்ந்த ‛எம்வி ரூயன்’ என்ற கப்பல் சோமாலியா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த கப்பல், ஆபத்தில் உள்ளதாக இந்திய போர்க்கப்பலுக்கு தகவல் வந்தது. அதற்கு இந்தியப் போர்க்கப்பலில் இருந்து பதில்அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடற்கொள்ளை தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் உடனடியாக அங்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. அந்த கப்பலில் அடையாளம் தெரியாத 6 நபர்கள் ஏறியதாக எச்சரிக்கை வந்தது. இதனையடுத்து இந்திய கடற்படை அதன் ரோந்து விமானத்தை அங்கே அனுப்பி உள்ளது. தற்போது அங்கே நிலவி வரும் சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
இந்த பிராந்தியத்தில் ஏதாவது பிரச்னை என்றால், முதலில் பதில் அளிப்பது இந்தியக் கடற்படைதான். இந்த கடற்கொள்ளையில் சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில், கடற்கொள்ளைக்கு எதிராக பல்வேறு நாடுகள் கடும் நடவடிக்கை எடுத்தன. இதன் காரணமாக நின்றிருந்த கடற்கொள்ளை தற்போது மீண்டும் நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here