7 லட்சம் சதுர அடிப்பரப்பில் வைர வர்த்தக மையம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 65,000 பேர் வைரம் சம்பந்தமான தொழிலில் ஈடுபடவுள்ளனர். வைரம் பட்டை தீட்டுவது குஜராத்தாக இருந்த போதிலும் வர்த்தகம் மும்பையில் இருந்து வந்தது. இப்புதிய மையம் திறக்கப்பட்டதால் வைரம் வர்த்தகம், ஏற்றுமதி & இறக்குமதியென அனைத்தும்சூரத்தில் புதிதாக திறக்கப் பட்டுள்ள மையத்திற்கு மாறுகிறது. சர்வதேச விமான நிலையமாக சூரத் விமான நிலையம் சில நாட்கள் முன்பு மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பென்டகன் மையம் தான் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையமாக 80 ஆண்டுகளாக விளங்கி வருகிறது. அதைவிட சூரத் மையம் பெரியது. மோதி குஜராத் முதல்வரானதற்குப் பிறகு பிரம்மாண்டமான வகையில் திட்டங்கள் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. அதில் சூரத் வைர வர்த்தக மையமும் அடங்கும்