ஃபக்கீர் சிங் கால்சா மற்றும் அவருடன் 25 நிஹாங் சீக்கியர்கள் 165 வருடங்களுக்கு முன்பு ஶ்ரீ ராம ஜன்ம பூமியை மீட்டெடுத்திடப் போராட்டம்

0
207

\ஃபக்கீர் சிங் கால்சா மற்றும் அவருடன் 25 நிஹாங் சீக்கியர்கள் 165 வருடங்களுக்கு முன்பு அயோத்யாவில் சர்ச்சைகுரிய கட்டிடமாக இருந்த (பாப்ரி மஸ்ஜித்தில்) இடத்தினுள் யாகம் செய்துள்ளனர். யாகத்தில் பங்கேற்ற 25 நிஹாங் சீக்கியர்களுடைய பெயர்களையும் சுவற்றில் எழுதிவைத்துச் சென்றுள்ளனர். ஃபக்கீர் சிங் கால்சாவின் வம்சத்தைச் சேர்ந்த பாபா ஹரிஜித் சிங் அயோத்யாவில் ப்ராண ப்ரதிஷ்டை நடக்கும் தினத் தன்று லங்கர் (அன்னதானம்) வழங்கிட உள்ளனர். 1858 இல் யாகம் செய்த நிஹாங் சீக்கியர்கள் மீது மௌலவி ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ள ஃப்.ஐ.ஆர். காப்பி இன்றும் ஆவணக் காப்பகத்தில் உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிலும் இதை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொண்டுள்ளனர். சனாதன தர்மத்தினைப் பின்பற்றும் அனைத்து சம்பிரதாயத்தினரும் ஶ்ரீ ராம ஜன்ம பூமியை மீட்டெடுத்திடப் போராடியுள்ளனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். ஜய் ஶ்ரீ ராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here