திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளையும் அவர் தொடங்கியும் வைத்தார்.
விழாவில் பிரதமர் மோடி :-
எனது தமிழ் குடும்பமே உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தமிழில் உரையை தொடங்கினார். நடிகர் விஜயகாந்தை நாம் இழந்து உள்ளோம். அவர் சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர். விஜயகாந்த் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அண்மையில் பெய்த மழை, வெள்ளம் காரணமாக, தமிழக மக்கள் கடந்த ஆண்டு கடுமையான துன்பத்தை அனுபவித்தீர்கள். இந்தத் துயரமான நேரத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக உளளது. ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்கள், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும். தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் எனவும் மோடி தெரிவித்தார்.