‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியில் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு) மார்ச் 23, 1893 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார்.அதிகம் படிக்கவில்லை என்றாலும் பல நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார். இவர் 18 வயதில் அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணியை அங்கிருந்து வரவழைத்து, இங்கு விற்பனை செய்தார். அதில் லாபமும் கிடைத்தது. இருசக்கர மோட்டாரரில் (பைக்) பக்கவாட்டில் இன்னொருவர் அமரும் வகையில் வடிவமைத்தார். திருப்பூரில் பருத்தி ஆலையை தொடங்கினார். இதன் மூலம் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு பொள்ளாச்சி பழனி இடையே பஸ் சர்வீஸ் நடத்தினார். யுனிவர்ஸல் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தை தொடங்கினார். பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணசீட்டு வழங்கும் கருவி, இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி, வெட்டுக் காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார். ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் மற்றும் 3வது பரிசுகள் கிடைத்தன. சாதாரண கிராமத்தில் பிறந்து பல அறிய சாதனைகளை படைத்த ஜி.டி.நாயுடு தனது 80வது வயதில் (1974) மறைந்தார். கோவை அவினாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி, அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
#GopalswamyDoraiswamyNaidu #சான்றோர்தினம் #gdnaidumuseum