இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. தங்களின் துறையில் உயரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. ஜன் நாயக் என்றழைக்கப்படும் பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு அவர் மறைந்த 35 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் அவரது நீடித்த முயற்சிகளுக்கு சான்றாகும் என பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவருக்கு புகழாராம் சூட்டியுள்ளார்.பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததால் ஓபிசி மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கிய கர்பூரி, இரண்டு முறை அம்மாநிலத்தின்முதலமைச்சராக பணியாற்றி உள்ளார்.