‘கவிக்குயில்’ #சரோஜினிநாயுடு சான்றோர்தினம்

0
154

ஹைதராபாத்தில், ஒரு பெங்காலி குடும்பத்தில் பிப்ரவரி 13, 1879 அன்று பிறந்தார் ஹைதராபாத்திலுள்ள நிஜாம் கல்லூரியின் நிறுவனரான அவரது தந்தை அகோரநாத் சட்டோபாத்யாயா ஒரு விஞ்ஞானி, கல்வியாளர், தத்துவஞானி. சரோஜினி நாயுடுவின், தாயார் பரத சுந்தரி தேவி ஒரு பெண் கவிஞர்.சரோஜினி நாயுடு தனது 16 வது வயதில், ஹைதராபாத் நிஜாமின் உதவியுடன் இங்கிலாந்து சென்று, லண்டனிலுள்ள கிங் கல்லூரியி படித்தார். பின்னர், கேம்பிரிட்ஜிலுள்ள கிர்டன் கல்லூரியில் பயின்றார். அங்கு அவருக்கு புகழ்பெற்ற மேதைகளுடன் அறிமுகம் ஏற்பட்டது. ஆர்தர் சைமன், எட்மண்ட் காஸ் ஆகியோருடன் சந்தித்து உரையாடினார்.
இந்தியாவின் கருப்பொருள்களான – பெரிய மலைகள், ஆறுகள், கோவில்கள், சமூகச் சூழல், போன்றவற்றை ஒட்டி கவிதை எழுதுமாறு காஸ் சரோஜினிக்கு அறிவுரை கூறினார். சரோஜினி நாயுடுவின் தி கோல்டன் த்ரேஷோல்டு (1905), தி பார்ட் ஆஃப் டைம் (1912), தி ப்ரோகேன் விங் (1912) ஆகிய படைப்புகள் இந்திய மற்றும் ஆங்கில வாசகர்களை ஈர்த்தது.பெண்களை அடிமையாக நடத்திய இந்தியச் சூழலில் சரோஜினி தனது கல்வி மூலம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தார். அதற்கு அவரது தந்தை உட்பட பல்வேறு நபர்கள் உறுதுணையாக இருந்தனர்.
ஆனால் நாட்டில் கோடிக்கணக்கான பெண்கள் அடிமைப் பட்டுக்கிடப்பதைக் கண்டு சரோஜினி வெகுண்டெழுந்தார். இந்தியப் பெண்களை சமையலறையில் இருந்து வெளியே கொண்டு வந்து, அவர்களை விழித்தெழச் செய்தார். பெண்களுக்கான உரிமைகள் கிடைக்கக் கோரி, நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், சரோஜினி நாயுடு, உத்தர பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் ‘சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர்’ என்ற பெயரைப் பெற்றார். கவிக்குயில், இந்தியாவின் நைட்டிங்கேர்ள் என அழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு.
இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவர். அவரது நினைவாகவே இந்தியாவில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
#SarojiniNaidu #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here