நாகபுரி
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் இரண்டாவது ஸர்ஸங்கசாலக் ஸ்ரீ குருஜி அவர்கள் 1942 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் மங்கரூள் தத்தவில் உள்ள மங்கள மாதா ஆலயத்திற்கு தரிசனம் செய்ய சென்றிருந்தார். இந்த நிகழ்வு நடந்து 81 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி மங்களாதேவி அமைப்பின் சார்பில் நூறு நபர்கள் குருசரித்திர பாராயணம் கொடிய துயர் தீர்க்கும் ஸ்தோத்திரத்தில் ஆயிரம் பாடல்களும் மங்கரூள் புரோகிதர்கள் சார்பாக ஆயிரத்தி நூறு பாடல்களும் மற்றும் 5000 பக்தர்கள் வீடு வீடாகச் சென்று ஹனுமான்சாலிசா படித்தல் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மங்கரூளில் அமைந்துள்ள மங்களாதேவி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடந்த நிறைவு நிகழ்ச்சியில் ஸர்ஸங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத்ஜி கலந்து கொண்டார். அவர் வந்தவுடன் மங்களாதேவி அமைப்பின் கண் அமைந்துள்ள மங்கள மாதா தேவியை தரிசனம் செய்தார்.