மேன் ஆஃப் தி மில்லினியம் – டாக்டர் ஹெட்கேவார்,’ புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்ரீ தத்தாத்ரேயா ஹோஸபாலே
ஆர் எஸ் எஸ் இன் அகில பாரத பொதுச் செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேயா ஹோசபாலே புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது “டாக்டர் ஹெட்கேவார் ஒரு தேசபக்தராக பிறந்தார். ஆங்கிலேயர்கள் பாரதத்தை ஆண்டதால் அவர் தேசபக்தராகவில்லை. அவர் இந்த நாட்டில் பிறந்ததிலிருந்தே, அவர் ஒரு தேசபக்தர்.”
“டாக்டர் ஹெட்கேவார் பாரதத்தின் சுதந்திரம் என்பது பாரத மக்களின் விடுதலைக்காக மட்டுமல்ல, காலனித்துவ சக்திகளின் கைகளில் கஷ்டப்படும் நாடுகளையும் விடுவிக்க வேண்டும் என்ற உலகளாவிய பார்வையைக் கொண்டிருந்தார்.”
“டாக்டர் ஹெட்கேவார் நாம் நமது சுயநலத்தை விட்டுக்கொடுக்க முடியாமல் சுயநலமாகிவிட்டதைக் கண்டுபிடித்தார். அவர் இந்த நோயைக் கண்டறிந்து ஒரு மருந்தை உருவாக்கினார் – அது தான் “சங்கம்.”
“நான் ஒன்று கூறுகிறேன், சங்கத்தை வெளியில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள். புரிந்து கொள்ள வாருங்கள். அதில் ஒரு பகுதியாகுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் வெளியேறலாம்.” என்று கூறினார்.