பாரதீய கலாச்சார மேம்பாட்டு அறக்கட்டளை நடித்தி வருகிற (பாரதீய சம்ஸ்க்ருதி அப்யுத்தான் நியாஸ்) குரு கோரக்நாத் மாணவர் விடுதிகளில் தங்கி பயின்று வரும் நாடோடி (குமந்த்) சமுதாய மாணவர்களின் ஆண்டு விழா உதய்பூரில் உள்ள பட்நோர் கோட்டையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்க மாணவர்கள் நல்ல கவிதைகள் இயற்றி, சிறந்த நடனம் ஆடியும், பாடல்கள் பாடியதுடன் மந்திரத்துடன் கூடிய சூர்ய நமஸ்காரம் செய்து காண்பித்தனர். நாடோடி (குமந்த்) சமுதாய மாணவர்கள் கல்வி கற்றிட கிராமங்கள் & நகரங்களில் பாரதீய கலாசார மேம்பாட்டு அறக்கட்டளை கட்டணமில்லா மாணவர் விடுதிகளை நடத்தி வருகிறது. பல்வேறு விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவர்கள் பங்கு கொண்ட ஆண்டு விழா இது. விடுதிகளின் ஒருங்கிணைப்பாளர் புஷ்கர் லோஹர் நாடோடி (குமந்த்) சமூக மாணவர்களின் மேம்பாட்டிற்காகவே இவ்விடுதிகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Home Breaking News பாரதீய கலாச்சார மேம்பாட்டு அறக்கட்டளை நடித்தும் குமந்த் சமுதாய மாணவர்களின் ஆண்டு விழா