மத்திய கிழக்கு நாடான ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர். அதேசமயம், சோமாலிய கடற்கொள்ளையர்களும் அவ்வழியாக செல்லும் கப்பல்களை கடத்துவதை வழக்கமாக செய்து வருகின்றனர். சோமாலியா கடற்பகுதியில் வரும் கப்பல்களை, இந்த கப்பலை வைத்து மடக்கி கடத்தல், பணம் பறித்தல் போன்ற சமூக கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சோமாலியாவின் செங்கடல் பகுதியில் நேற்று சென்றிருந்த கொள்ளையர்களின் ரூயென் கப்பல், இந்திய கடற்படையின் போர்க்கப்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதேசமயம், வானில் பறந்த கடற்படை ஹெலிகாப்டர் வாயிலாக கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது. இந்நிலையில், அரபிக்கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை, சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேரை கைது செய்தது. அவர்களிடம் பிணைக்கைதிகளாக சிக்கியிருந்த கப்பல் ஊழியர்கள் 17 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
Home Breaking News அரபிக்கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேரை கைது செய்தது