மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சியில் பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஒரு சமூகத்தின் மக்கள் தொகை பிறப்பு விகிதம் 2 புள்ளி ஒரு சதவீதத்திற்கு கீழ் குறையும்போது, அந்த சமூகமே இந்த உலகில் இருந்து மறைந்துவிடும் என நவீன மக்கள் தொகை அறிவியல் கூறுவதாக தெரிவித்தார்.
நெருக்கடியான சூழ்நிலைகள் இல்லாதபோதும் அந்த சமூகம் அழிவது உறுதி என குறிப்பிட்ட அவர், அந்த வகையில் பல மொழிகள், சமூகங்கள் நம் நாட்டில் அழிந்து போய்விட்டதாக குறிப்பிட்டார்.
அதன் காரணமாகவே மக்கள் தொகை பிறப்பு விகிதம் 2 புள்ளி ஒரு சதவீதத்திற்கு கீழ் செல்லக்கூடாது என நம் நாட்டு அரசால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஒரு சமூகம் வாழ வேண்டும் என்றால் மக்கள் தொகை எண்ணிக்கை அதற்கு மிகவும் முக்கியமான ஒன்று எனவும் மோகன் பகவத் தெரிவித்தார்.