கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

0
214

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது?

இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும் வழிநடத்தியவர்  ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச் செயலாளர் ஏக்நாத் ரானடே என்கிற மகத்தான கர்மயோகி.

சுவாமி விவேகானந்தர் பாறை நினைவாலயத்திற்காக அனைத்து பொறுப்புகளிலும் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு முழு நேரமாக இதற்கென தன் வாழ்வையே அர்ப்பணித்து இன்று நாம் பிரமித்து காணக்கூடிய விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை அமைவதற்கு முழு முதல் காரணமாக விளங்கினார்

கன்னியாகுமரியில் இருந்த இரண்டு பாறைகளையும் பயன்படுத்தி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் பணியை, ஏக்நாத் ரானடே தலைமையில் செயல்பட்ட விவேகானந்தா நினைவு மண்டபக் குழுவிடம் தமிழக அரசு ஒப்படைத்தது.

சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின், அருகிலிருந்த மற்றொரு பாறையை ஜூலை 17, 1977ல் தமிழக அரசாங்கத்திடம் விவேகானந்தா கேந்திரம் திருப்பி ஒப்படைத்தது. ஆனால், இதற்குப் பின்பு மார்ச் 15, 1979ல், திருவள்ளுவருக்கு நினைவாலயம் மற்றும் சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திட்டம் அனுப்பியது விவேகானந்தா கேந்திரம்.

இந்த திட்டத்தை ஒருங்கிணைத்ததும், அரசு அனுமதிக்கச் செய்ததும் ஏக்நாத் ரானடே. இதன் அடிப்படையில் தமிழக அரசும் அந்த யோசனையை ஏற்று, திருவள்ளுவர் நினைவாலயத்திற்கான அடிக்கல்லை அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும், திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல்லை அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயும் ஏப்ரல் 1979ல் நாட்டினர்.

இன்று கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் கம்பீரமான சிலை இருக்கிறது என்றால், அதற்கு முழுக் காரணமாக இருப்பவர் ஏக்நாத் ரானடே

தற்போது இந்த சிலைக்கு வெள்ளி விழா கொண்டாடுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here