சிவன் மலை உத்தரவு பெட்டியில் அம்பு; அண்ணனுக்காக முருகபெருமான் இந்து முன்னணிக்கு சொன்ன செய்தியா?

0
1067

திருப்பூர் மாவட்டம் சிவன் மலையில் சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டி உள்ளது. முருகப்பெருமான் பக்தர் கனவில் திண்டி கூறும் பொருட்கள், உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யபடும். கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அகத்தியர் ஜாதகம். பழைய 5௦௦ ரூபாய் நோட்டுகள் நாணயங்கள் வெள்ளி சட்டை, பச்சை வேட்டி- துண்டு வைத்து பூஜைகள் நடந்தது. பின்னர் ஒரு பக்தரின் கனவில் தோன்றியபடி உத்தரவு பெட்டியில் வெள்ளியால் செய்த வில் – அம்பு வைத்து நேற்று பூஜை நடந்தது.

இதனை பற்றி சிவசார்யர்கள் கூறும்போது உலகத்தில் தற்போது நடக்கும் அனைத்து தூரோக செயல்களும் வேருடன் அழித்து தர்மம் நிலை நிறுத்தப்படும் என என்பதை உணர்த்துவதாக கூறிகின்றனர்.

மேலும் தற்போது அமைத்துள்ள திமுக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்து உள்ளது. அதற்கு இந்து முன்னணி பேரியக்கம் ஹிந்து கோவில் வாசலில் திமுக அரசிற்கு நல்ல புத்தி புகட்ட வேண்டும் என சிறப்பு பிராத்தனையுடன் போராட்டம் நடத்தினர். அதனை சரி செய்து, பக்தர்களுக்கும் ஹிந்து தர்மத்துக்கும் நடக்கும் சீர்கேடுகள் விலகும் என அண்ணன் விநாயகருக்காக முருகபெருமான் உறுதி அளித்து உள்ளார். என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here