சமூகநீதி கல்வி, வேலைவாய்ப்பில் சட்டப்படி முழுமையாகச்செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழக முதல்வர் ஸ்டாலினால், ’சமூகநீதிக்கண்காணிப்புக்குழு’ அமைக்கப்பட்டது. இக்குழுவில்அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். இக்குழுவில் வழக்கம்போல, சுப வீரபாண்டியன், மனுஷ்ய புத்திரன், ஜெய்சன் என நேரடி, மறைமுக தி.மு.க ஆதரவாளர்களுக்கு இடமளிக்கப்பட்டது. ஆனால், ஸ்டாலினால் அமைக்கப்பட்ட இக்குழுவில் பெண்கள் ஒருவர்கூட இடம்பெறவில்லை. சமூக நீதி என மூச்சுக்கு முன்னூறு தடவை பெயரளவில் மட்டும் பேசிவிட்டு, பெண்களே இல்லாமல் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. பெண்கள் இல்லாமல் எப்படி சமூக நீதி சாத்தியமாகும், இதுதான் தி.மு.கவின் சமூக நீதியா? என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.